பிரதான செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் முஸ்லிம்கள் வாழும் கணேவத்தைக்கு சென்றுள்ளார்.

கோவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயணத்தடை விதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குருணாகல் கணேவத்த பிரதேசத்தை சேர்ந்த நபர்கள், புத்தளத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிக்கும் கணேவத்த பிரதேசத்தை சேர்ந்த பலருக்கு புத்தளத்தில் உறவினர்கள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உறவு தொடர்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தை சேர்ந்தவர்கள் புத்தளத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த ஆபத்தான நிலைமை தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் எனவும் பிரதேசத்திற்குள் வரும் அடையாளம் தெரியாத நபர்கள் பற்றிய தகவல் அறிந்தால், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

காத்தான்குடி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்.

wpengine

சிகிரியா குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 4 கோடி நிதி உதவியை வழங்கிய யுனெஸ்கோ!

Editor

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் ஏலத்தில்..!

Maash