பிரதான செய்திகள்

தனிக்கட்சியாக போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அரசியல்வாதிகள் மகிந்தவை சூழ்ந்துள்ளனர்: பண்டார

தனிக்கட்சியாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சூழ ஒன்றிணைந்து, தேர்தலில் வெற்றிபெற முயற்சித்து வருவதாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிபில அதிகார சபையின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்று அமைவதை குழப்புவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடனான தேசிய அரசாங்கத்திற்குள் செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எப்பாவெல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Related posts

Youtube போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் Facebook

wpengine

சந்தையில் மரக்கறிகளின் நுகர்வு 40% அதிகரிப்பு!

Editor

இன்று முதல் பயணிகள் பஸ்களில் இடம்பெறும் மாற்றம்!

Editor