செய்திகள்பிரதான செய்திகள்

தந்தை மற்றும் மகன் கொலை – 27 மற்றும் 23 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது.

தந்தை மற்றும் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சகோதரர்கள் இருவர் இராஜாங்கனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய தந்தையும் 26 வயதுடைய மகனுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 27 மற்றும் 23 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தந்தையும் மகனும் பல ஆண்டுகளுக்கு முன்னர் சந்தேக நபர்களின் தந்தையை தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

புத்தளம்; சமூக அடையாளத்துக்கான இணக்கத்தளம் – தோப்பு வீழ்ந்து தோழமையானது..!

wpengine

தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டம்,பதவிக்காக செயற்பட கூடாது – டெனீஸ்வரன்

wpengine

தலைமன்னார்,முசலி,மடு போன்ற பிரதேசங்களை சுற்றுலாத்துறை மேம்படுத்த அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine