கலேவெல, மகுலுகஸ்வெவ நான்காம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய சமன் பிரியந்த என்பவருக்கும் அவருடைய மகனுக்கும் இடையே ஏட்பட்ட வாய்த்தாக்கத்தின் காரணமாக இரும்பு கம்பியினால் மகன் தாக்கியதால் மரணம் அடைந்துள்ளார் .
நேற்று (05) இரவு முதல் இன்று காலை வரை கொலையை மறைக்க பல சதித்திட்டங்களை தீட்டியதாகவும், மேலும் கொலையை மறைக்க அண்டை வீட்டாரின் உதவியை கோரியதால், குடியிருப்பாளர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர் .
இறந்தவரின் மனைவியும் அவரின் மகனும் இந்த வீட்டில் வசித்து வந்ததாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மகுலுகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.