இரத்தினபுரி – பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ருக்மல்கந்துர பிரதேசத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை இயக்க முயன்ற போது லொறியானது பின்னோக்கிப் பயணித்துள்ளது.
இதன்போது அங்கு இருந்த குழந்தை லொறியின் சக்கரத்தின் சிக்கி படுகாயமடைந்துள்ளநிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை தெபெலமுல்ல பகுதியைச் சேர்ந்த 1 வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் சடலம் பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பில் 39 வயதுடைய குழந்தையின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.