பிரதான செய்திகள்

தங்கத்தின் விலையில் மீண்டும் வீழ்ச்சி

 

Reportஉலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 638,284 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வருகின்றது. 

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,150 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,650 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஒலுவில் கடலரிப்பு! றிசாட் பதியுதீனால் துாக்கமின்றி ஒடி தெரியும் ஹக்கீம்

wpengine

கதிர்காமம் ஏழுமலையில் கெப் ரக வாகனம் கவிழ்ந்து விபத்து!

Editor

இளம் மனைவிக்கு கணவன் செய்த கேவலம்! 23ஆம் திகதி விளக்கறியல்

wpengine