உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ட்ரம்பின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய பயணத் தடை மீதான மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின் முக்கிய 6 அரபு நாடுகளிலிருந்து அமெரிக்காவினுள் நுழைவதற்கு தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு 120 நாட்களுக்கும், பொது மக்களுக்கு 90 நாட்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

தீவிரவாதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், பலர் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட முன்னரே அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்தது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்ரம்ப் அரசு மேன்முறையீடு செய்தது.

இருப்பினும் மேன்முறையீட்டு மனுவையும் நிராகரித்த நீதிபதிகள், குறித்த உத்தரவிற்கு காலவரையின்றி தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் 9 ஆவது சுற்று நீதிமன்றத்தில் மீண்டும் மேன்முறையீடு மனுவை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அமெரிக்க குடியேற்றக் கொள்கைக்கு எதிராக ட்ரம்ப் அரசு தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், இந்த உத்தரவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

எந்த மதத்தினருக்கும் தடை விதிக்கும்படி, அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை என்பதால் மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து உத்தரவிட்ட நீதிமன்றம், ட்ரம்ப் விதித்த தடை உத்தரவிற்கான தடை தொடரும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

“அதிகார ஆணவமும் இனவாத நடவடிக்கைகளுமே நாட்டை பேரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது! றிஷாட்

wpengine

பஷில் ராஜபக்ஷ மீண்டும் விடுதலை

wpengine

நான் கொண்டுவரும் திட்டங்களை சிலர் தடுக்கின்றார்கள் -அமைச்சர் றிசாட்

wpengine