பிரதான செய்திகள்

டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படும்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்துமாறு நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நேற்று (13) இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்.

டொலர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மேலும், இந்தியாவிற்கான தனது விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் நிதி அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts

Multi Knowledge (Android) செயலில் சம்மாந்துறையைச் சேர்ந்தவர் உருவாக்கம்.

wpengine

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 பெண்கள் உட்பட 13 பேர் மீட்கப்பட்டுள்ளன .

Maash

ரணிலுக்கு எதிரானவர்களை மொட்டுகட்சியில் இருந்து நீக்க ரணில் நடவடிக்கை! பதவிகள் வழங்க நடவடிக்கை

wpengine