பிரதான செய்திகள்

டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதிய விளாமிடிர் புட்டின்

ரஷ்யா ஜனாதிபதி விளாமிடிர் புட்டின் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தற்போது அக்கடிதத்தை டிரம்ப் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

நாடுகளுக்கிடையிலான நட்புறவை பலப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் ரஷ்யா அமெரிக்க நட்புறவை பலப்படுத்த வேண்டியது காலத்தின் தேவை என டொனால்ட் டிரம்பிற்கு முன்கூட்டியே எழுதியுள்ள கிறிஸ்மஸ்தின மற்றும் பிறக்கவிருக்கும் புதுவருடத்திற்கான வாழ்த்துச் செய்தியில் விளாமிடிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

டீரம்ப் அண்மையில் வெளியிட்ட கருத்துகளில் உலகில் பலம் வாய்ந்த இராணுவத்தை ஐக்கிய அமெரிக்காவில் கட்டமைப்பதற்கு தான் உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அத்தோடு அணுவாயுத நடவடிக்கைகளில் அமெரிக்காவே முதன்மையானது எனும் நிலையை உருவாக்குவதாக கூறி  ரஷ்யாவை சவாலுக்குட்படுத்தும் கருத்துகளை டிரம்ப் தெரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மையென ரஷ்ய ஜனாதிபதி பேச்சாளர் டிமிட்டி பெஸ்கோ தெரிவித்துள்ளார். அத்தோடு கடிதத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்ய ஆகிய இரு நாடுகளும் மாறுபட்ட பாதையில் செல்வதற்கு தேவையில்லை எனும் கருத்தே வலியுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், புட்டின் எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்த விடயங்கள் யாவும் ஏற்புடையவையே. இரு நாடுகளும் வேறுபட்ட பாதைகளில் செல்ல தேவையில்லை. மாறாக அவர் குறிப்பிட்டதைப்போல் ஓத்துழைப்புடனான கட்டுமானங்களை வேறுபட்ட இடங்களில் செயற்படுத்துவதன் மூலம் நட்புறவை வளர்ப்பதற்கு வகை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிட்டுள்ளமையானது புட்டின் அரசில் வியூகத்தில் அமெரிக்க நட்புறவை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இப்போக்கானது எதிர்கால ரஷ்ய அமெரிக்க கூட்டு நடவடிக்கைகளை வலுப்பெறச் செய்யும் என அரசியில் வட்டாரங்கள்  செய்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் பிரச்சினை! அகிலவை சந்திக்க திர்மானம்

wpengine

சஜித், ஆசாத் கூட்டணி! தேசிய பட்டியல் வழங்குவதாக உறுதி

wpengine

பொரளஸ்கமுவ ஜும்ஆ பள்ளிவாசல் தாக்குதல் அஸாத் சாலி கண்டனம்

wpengine