Breaking
Sun. Nov 24th, 2024

கைபேசிகள் வழியாக மட்டுமின்றி டெஸ்க்டாப் / லெப்டாப் (desktop and laptop) கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோரும் பேஸ்புக் லைவ் வசதியைப் பயன்படுத்த முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


சமூகவலைத்தளமான பேஸ்புக் தனது பயனாளர்களுக்காக பேஸ்புக் லைவ் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.
இதன்மூலம் அவர்கள் தங்கள் கைபேசி வழியாக பதிவு செய்யும் வீடீயோக்களை நேரடியாக ஒளிபரப்பும் வசதி இருந்தது.

கைபேசி மூலம் செயற்பட்டு வந்த இந்த வசதி ஆரம்பத்தில் தனியான பயனாளர்களுக்கு அல்லாமல், முகநூல் பக்கங்களைப் பயன்படுத்துவோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த வசதியை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி பேஸ்புக் பயனாளர்களும் பயன்படுத்த முடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் பேஸ்புக் நிறுவன வலைப்பூ பதிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மேம்படுத்தப்பட்ட வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வசதியானது வீடியோ ப்ளாக்கிங் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *