மக்களவை தேர்தலில் போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துவிட்டதால், முன்பணம் இனி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சீமானின் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.
அதன் படி இந்த தேர்தலில் பெருவாரியான வாக்குகளை(3.87 சதவீதம்) பெற்றிருந்தாலும், அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளது.
இதனால் வேட்பாளர் டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் ரூபாய் கட்டியிருப்பர், தற்போது டெபாசிட்டை இழந்துள்ளதால் அந்த பணத்தை பெற முடியாது.
இதே போன்று கமலின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அமமுக கட்சியும் டெபாசிட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெபாசிட் என்றால் என்ன?
ஒரு மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்றால் வேட்புமனுவுடன் டெபாசிட் தொகை ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த டெபாசிட் தொகை தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் ஆணையம் திரும்ப கொடுத்துவிடும். ஆனால், அதிலும் ஒரு நிபந்தனை இருக்கிறது.
அதாவது பதிவான செல்லத்தக்க வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும்.
அதாவது ஒரு தொகுதியில் 6 லட்சம் ஓட்டுக்கள் பதிவாகியிருந்தால் குறைந்தது ஒரு லட்சம் ஓட்டுகளை அந்த வேட்பாளர் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் டெபாசிட் தொகை திரும்ப கிடைக்காது.