பிரதான செய்திகள்

டெங்கு மற்றும் கொரோனா தொடர்பில் சுகாதார பிரிவினர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

இலங்கையில் இந்த நாட்களில் டெங்கு மற்றும் கோவிட் பரவி வருவதாக பாணந்துறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் மல்கந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.

தொண்டைப்புண், இருமல், சளி ஆகியவற்றுடன் காய்ச்சலும் இருந்தால், அது கோவிட் அறிகுறியாகவும், தசைகளில் கடுமையான வலி, தலைவலி, டெங்கு அறிகுறியாகவும் இருக்கலாம் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும், கோவிட் நோயின் போது நோயாளி தனது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடிந்தாலும், டெங்கு நோயாளியால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு முன், மருத்துவர் மூலம் நோய் என்ன என்பதைக் கண்டுபிடிப்பது கட்டாயமாகும் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆமைக்குட்டியின்  தோற்றத்தில் குழந்தையொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

wpengine

கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்களுக்கு தூக்கு கயிறு

wpengine

மன்னார் போக்குவரத்து சேவை பாதிப்பு! மாணவர்கள் பல விசனம்

wpengine