பிரதான செய்திகள்

டெங்கு ஒழிப்பு ஊழியர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம் – அரசாங்கத்துக்கு சவால் விட்ட சஜித்!

டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் சேவையை நிரந்தரப்படுத்த சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல விருப்பம் தெரிவித்த போதிலும்,அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னரும் இதேபோன்ற பல அமைச்சரவைப்பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவது கடினம் என்றாலும், இவர்கள் 7 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் டெங்கு ஒழிப்புக்கு 22,000 ரூபா உதவித்தொகையுடன் பணியமர்த்தப்பட்ட அரச ஊழியர்கள் என்பதனால்,180 நாள் சேவை நாட்களுக்குள் நிரந்தரமாக்கல் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலை இருந்தும் அது அவ்வாறு அமுல்படுத்தப்படவில்லை என்றும், இதனால் 1105 அதிகாரிகள் கைவிடப்படும் நிலைக்கு நிலமை மாறியுள்ளதாகவும், இந்த அதிகாரிகளின் உரிமைகளுக்காகஎதிர்காலத்திலும் போராடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த போது ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்த அதிகாரிகளை, அரசியல்பழிவாங்கலுக்கு ஆளாகிய இத்தரப்புக்கு நியாயத்தைப் வழங்க தற்போதைய ஜனாதிபதியாலும், செயலாற்றமுடியாத அரசாங்கத்தாலும் முடியாவிட்டால் கிட்டிய எதிர்காலத்தில் உதயமாகும் ஐக்கிய மக்கள் சக்திஅரசாங்கத்தின் கீழ் குறித்த நியமனங்களை நிரந்தரமாக்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டெங்கு ஒழிப்பு அதிகாரிகளின் பிரதிநிதிகளுடனான இன்று (11) சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

அமைப்பாளர் பதவியினை இழந்த பிரதி அமைச்சர்

wpengine

ராஜபக்ஷ எமக்கு நேரம் ஒதுக்கவில்லை

wpengine

ஜனாதிபதி செயலாளராக கிழக்கு மாகாண அளுநர்! தகவல்

wpengine