டுபாய் மற்றும் அபுதாபியில் பணிபுரியும் இலங்கையர்களின் காலாவதியான கடவுச்சீட்டுகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் உதய இந்திரரத்ன வலியுறுத்தியுள்ளார்.
காலாவதியான கடவுச்சீட்டு காரணமாக இலங்கை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், டுபாய் மற்றும் அபுதாபியில் தங்கியுள்ள அவர்களது குடும்பங்களும் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளன.
ஏற்கனவே காலாவதியான சுமார் 5,000 கடவுச்சீட்டுகளின் கோரிக்கைகள் தூதரகத்திற்கு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான பதில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இலங்கைக்கு பெருமளவிலான அந்நியச் செலாவணிக்கு பங்களிக்கும் இவர்களுக்கு உடனடி சேவையை வழங்குமாறும் தூதுவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் மேலும் கோரிக்கை விடுத்தார்.