உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

டிரம்ப் மோசமானவர் அல்ல – மிகவும் நல்லவர்!

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாடு தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் நடைபெற்று வருகின்றது. தலைநகர் லிமாவில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டார்.

லிமாவில் இளைஞர்களுடன் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஒபாமா பேசியதாவது:-

வெள்ளை மாளிகையில் பணியாற்ற ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு தகுதி இல்லை என்ற தவறான முடிவுக்கு வர வேண்டாம். டிரம்பை மோசமானவராக கருத வேண்டாம்.

நிர்வாகம் எப்படி நடத்துகிறார் என்பதை பார்க்கும் வரை காத்திருங்கள். உலக நாடுகள் அமைதியாக, செழிப்புடன் ஒற்றுமையாக வாழும் பொறுட்டு அவருடன் நிர்வாகம் இருக்கிறதா? இல்லையா என்று பார்த்து பின்னர் தீர்மானியுங்கள்.

புதிய ஜனாதிபதி குறித்து உலக நாடுகள் உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம். இது உலக நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு முக்கியமானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பை கடுமையாக விமர்சித்து வந்த ஒபாமா தேர்தலுக்கு பிறகு அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும்மாறு தொடர்ச்சியாக பேசி வருகிறார் .

Related posts

ஆயிரம் கனவுகளுடன் இல்லறத்தை தொடங்கிய இளம் ஜோடி

wpengine

அத்துரலியே ரதன தேரர் எனக்கு ஒரு தேனீரை கூட வழங்கியதில்லை என ஞானசார தேரர்

wpengine

மஹிந்தவின் மவுசு ஏறிச்செல்வதில் அரசாங்கத்தின் போக்குகளும் காரணமாகின்றன.

wpengine