பிரதான செய்திகள்

டிசம்பர் 07ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் கோத்தாபாய போட்டி

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் 07ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்களை சுட்டிக்காட்டி இவ்வாறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது முழுப் பதவிக்காலமும் பதவியில் இருக்க முடிவு செய்தால், ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 09ஆம் திகதிக்கும் டிசம்பர் 09ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும்.

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்டோபர் 22ஆம் திகதி இறுதி செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது,
அன்றைய நாளில் தேர்தலுக்காக அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டால், குறைந்தபட்சம் அடுத்த நான்கு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எனவே, டிசம்பர் 07ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய நாளில் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்றும், தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், மகிந்த அணியிலிருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச களமிறக்கப்படவுள்ளார் என நம்பகரமாக அறியமுடிகின்றது.

தேர்தலில் களமிறங்குவதற்காக அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்குரிய ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாச அல்லது கருஜயசூரிய களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

வவுனியா பசார் வீதி கடைத்தொகுதியில் ஒரு குடும்பஸ்தரின் சடலம் .!

Maash

கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தலைமத்துவத்தை வெளியேற்ற மு.கா முக்கியஸ்தர்கள் சதி முயற்சி!

wpengine

கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன பொலிஸாரினால் கைது

wpengine