பிரதான செய்திகள்

டிசம்பர் முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு: சமுர்த்தி பயனாளிகள் அல்லாதோர் பாதிப்பு

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்ஸாரின் கையொப்பத்துடன் நவம்பர் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, நீர்க்கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப்படுகின்றது.

அதன் பிரகாரம், சமுர்த்தி பயனாளிகளின் குடும்பங்களுக்கான வீட்டுப்பாவனை நீர்க்கட்டணம் 15 அலகுகள் வரை எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

எனினும், 16 தொடக்கம் 20 வரையான அலகுகளுக்கு இடையிலான பாவனைக் கட்டணம் 8 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 320 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

21 தொடக்கம் 25 வரையான அலகுகளுக்கு இடையிலான பாவனைக் கட்டணம் 17 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 300 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 26 தொடக்கம் 30 வரையான அலகுகளுக்கு இடையிலான பாவனைக் கட்டணம் 26 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 600 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகள் அல்லாத ஏனைய வீட்டுப் பாவனையாளர்களுக்கு புதிய கட்டணத் திருத்தத்திற்கமைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

5 அலகுகள் வரை பாவனைக் கட்டணம் 8 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 200 ரூபாவாகவும், 6 தொடக்கம் 10 வரையான அலகுகளுக்கு பாவனைக் கட்டணம் 8 ரூபாவாலும் மதாந்தக் கட்டணம் 185 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

11 தொடக்கம் 15 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 6 ரூபாவாலும் மாதாந்தக் கட்டணம் 180 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதுடன், 16 தொடக்கம் 20 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 12 ரூபாவாலும் மாதாந்தக் கட்டணம் 320 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகின்றது.

21 தொடக்கம் 25 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 17 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 300 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகின்றது.

26 தொடக்கம் 30 அலகுகளுக்கான பாவனைக் கட்டணம் 26 ரூபாவாலும், மாதாந்த சேவைக்கட்டணம் 600 ரூபாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மற்றும் மத ஸ்தலங்களுக்கான நீர்க்கட்டணம் ஒரு ரூபாவாலும் மாதாந்தக் கட்டணம் 250 ரூபாவிற்கு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை வர்த்தமானி அறிவித்தலை ஆய்வு செய்ததன் ஊடாக அறியக்கிடைத்துள்ளது.

Related posts

பாரிய ஊழல் மோசடிகள் ரணில் விவாதம்

wpengine

‘மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைது கண்டிக்கத்தக்கது’ – மு.கா.ரவூப் ஹக்கீம்!

wpengine

எல்லை நிர்ணயம்,உறுப்பினர் எண்ணிக்கை!நீதி மன்றம் தடை

wpengine