உத்தியோகபூர்வ காலம் முடிவடைந்துள்ள ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் நடைபெறக்கூடிய அறிகுறிகள் தென்படுவதாக அரசின் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்லை நிர்ணய அடிப்படையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுமென அரசு அறிவித்திருந்தபோதிலும் அதில் ஏற்பட்டுள்ள சட்டச்சிக்கல்களால் அத்தேர்தல் மேலும் தாமதமாகலாம் எனவும், அதனால் மேற்கூறிய மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலை பழைய முறையிலேயே நடத்த அரசு தீர்மானித்திருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இந்த வருடம் ஒகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.