உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

டிக்-டாக் தடை! இந்தியா ஊழியர்கள் பணி நீக்கம்

சீனாவின் டிக்-டாக் செயலி மூலம் பகிரப்படும் காணொலிகளால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, அந்த செயலிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், பெரும்பாலான இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைடெடன்ஸ் முடிவு செய்துள்ளது.

சீனாவின் டிக்-டாக் செயலி மூலம் பகிரப்படும் காணொலிகளால் பல்வேறு சமூகப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி, அந்த செயலிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, டிக்-டாக் செயலி உள்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்காலிகத் தடை விதித்தது. அதைத் தொடர்ந்து அந்த செயலிகளின் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு நிறுவனங்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், செயலிகளுக்கான தடை உத்தரவு தொடரும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், டிக்-டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளின் சேவையை இந்தியாவில் முழுமையாக நிறுத்தப்படுகிறது என இந்தியாவில் உள்ள அந்நிறுவன ஊழியர்களுக்கு புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் சீனாவின் பைடெடன்ஸ் சமூக ஊடக நிறுவனம் தெரிவித்தது.

மேலும் இந்தியாவில் மீண்டும் எப்போது சேவையைத் தொடங்குவோம் என்பது குறித்து தற்போது உறுதியாக சொல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் சேவையைத் தொடங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்று அந்த மின்னஞ்சல் தகவலில் தெரிவித்திருந்தது.

தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவால் இந்தியாவில் உள்ள 2,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்த தடை வித்துள்ள நிலையில், அந்த செயலிகளில் பணிபுரியும் பெரும்பாலான இந்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related posts

சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்கவும்.

wpengine

சமல் ராஜபஷ்ச தேர்தலில் போட்டியிடுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

wpengine

ஜனாதிபதி வேட்பாளர் நானே தீர்மானிப்பேன் மஹிந்த

wpengine