பிரதான செய்திகள்

ஞானசார தேரர் விவகாரம்! ஜனாதிபதியிடம் முஸ்லிம் எம்பிக்கள் கேள்வி எழுப்பவேண்டும்.

ஞானசார தேரரை ஜனாதிபதி தரப்புபாதுகாப்பதாக ஏற்கனவே செய்திகள் பரவிஇருந்த நிலையில் ஜனாதிபதியின் இணைப்புசெயளாலர் ஷிரால் லக்திலக இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டள்ளமை தொடர்பில் முஸ்லிம் எம்பிக்கள்கேள்வி எழுப்பவேண்டும் என பாராளுமன்றஉறுப்பினர் டி வீ சானக கோரியுள்ளார்.

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டு வந்த ஞானசார தேரரை  ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர்ஷிரால் லக்திலகெவே சட்டத்தில் பிடியில் இருந்து பாதுகாக்க முன்னின்று பல வேலைகளை செய்துள்ளதாக ஆளும்தரப்பினர் சிலரே கூறி வருகின்றனர்.

ஞானசார தேரர் என்பவர் மஹிந்த ஆட்சியைகவிழ்க்க இந்த நல்லாட்சியால் பாவிக்கப்பட்ட ஒரு  கருவி என நாம் அன்றில் இருந்துகூறிவருகிறோம்.இதை அன்று நம்ப மறுத்தமுஸ்லிம்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அண்மையில் ஞானசார தேரருக்கு மின்னல்வேகத்தில் பிணை வழங்கப்பட்டது.இதன்பின்னணியில் ஜனாதிபதி இருப்பதாகவும் துமிந்த திஸாநாயக்க வீட்டில் அவரை மறைத்து வைத்திருந்ததாகவும் குற்றம்சுமத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதியின்பணிப்புரையில் அவரது  இணைப்புச்செயலாளர் ஷிரால் பின்னணியில் இருந்து ஞானசார தேரருக்கு சட்ட சலுகைகள் பெற்றுக்கொடுத்துள்ளதாக அரசியல்உயர்மட்டங்களில் இருந்து தகவல்வெளியாகியுள்ளன.

இது விடயமாக முஸ்லிம் சமூகமும் முஸ்லிம்எம் பிக்களும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டி வீசானக கோரியுள்ளார்.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் திறந்து வைப்பு!

Editor

முஸ்லிம்கள் என்றால் எவ்வளவு அடித்தாலும் ஐ.தே.கட்சி தான் என்ற நிலையை மாற்ற வேண்டும்

wpengine

நாட்டில் தீவிரமடையும் டெங்கு நோய்!

Editor