Breaking
Sun. Nov 24th, 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஞானசார தேரர் வழங்கிய வாக்குமூலத்தை தனது கையடக்க தொலைப்பேசியில் ஒலிப்பதிவு செய்த மௌவி மற்றும் அவரின் சட்டத்தரணி ஆகியோருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் தவிசாளர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று (10) ஆரம்பமான போதே ஆணைக்குழுவின் தவிசாளர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல் குறித்த சட்டத்தரணி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரச சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவிக்குமாறு ஆணைக்குழுவின் செயலாளருக்கு தவிசாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் எதிர்காலம் குறித்து சிந்தித்து சட்டத்திற்கு அமைந்து செயற்படுமாறு ஆணைக்குழுவில் இன்று பிரசன்னமாகியிருந்த அனைத்து சட்டத்தரணிகளுக்கும் ஆணைக்குழுவின் தவிசாளர் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

குறித்த மௌவி சட்டத்தரணி ஊடாகவே ஆணைக்குழுவிற்குள் கையடக்க தொலைப்பேசியை கொண்டுச் சென்றுள்ளார்.

இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் பதில் செயலாளராக கடமையாற்றும் தெமட்டகொட பகுதியில் வசிக்கும் 51 வயதான முர்சிட் என்ற மௌவியே இவ்வாறு ஒலிப்பதிவு செய்துள்ளார்.

ஞானசார தேரர் நேற்று (09) மீண்டும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தமை குறிப்பிடதக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *