பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என கொழும்பு மேலதிக நீதவான் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றில் குழப்பம் விளைவித்த சம்பவம் குறித்து நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணைகளில் சாட்சியமளித்த நீதவான் ரங்க திஸாநாயக்க பின்வருமாறு கூறினார்.
நீதிமன்றிற்குள் செல்லிடப்பேசி ஒலித்தாலோ, கொட்டாவி விட்டாலோ விளக்க மறியலில் வைப்பதற்கு அதிகாரம் உண்டு.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஞானசார தேரரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்களை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட போது ஹோமாகம நீதிமன்றில், ஞானசார தேரர் கலகத்தில் ஈடுபட்டார்.
நீதிமன்றின் மீது கட்டளையிடும் தொனியில் கருத்துக்களை வெளியிட்டார்.
ஏற்கனவே திட்டமிட்ட வகையில் ஞானசார தேரர் இவ்வாறு நடந்து கொண்டது தெளிவாகியது.
நீதிமன்றில் கலகத்தில் ஈடுபட்டமை ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமல்ல என நீதவான் சாட்சியமளித்துள்ளார்.