பிரதான செய்திகள்

ஞானசார தேரர், எந்த அரசியல் சக்திகளுடனும் இணைவதில்லை

சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், எந்த அரசியல் சக்திகளுடனும் இணைவதில்லை என்று உறுதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் வித்தாரந்தெனியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் இன்று கண்டிக்கு சென்று தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட உள்ளார்.

இதன் பின்னர் அவர், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசியும் ஆலோசனைகளையும் பெற்று கொள்ள உள்ளதாகவும் நந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மாநாயக்கர்களுடனான சந்திப்பில் ஞானசார தேரர், தேசப்பற்று தொடர்பான புதிய வேலைத்திட்டம் குறித்து மாநாயக்க தேரர்களுக்கு விளக்க உள்ளதாகவும் அவர் அரசியல் சக்திகளுடன் சம்பந்தப்படுவதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும் வித்தாரந்தெனியே நந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பெண்களின் பங்கை சரியாக அடையாளம் கண்டிருக்கும் ஜனாதிபதியின் வாழ்த்து

wpengine

சிறையில் மஹிந்த! மக்கள் விரும்பும் தலைவர்களை கைதுசெய்தும் அரசாங்கம்

wpengine

இந்தியாவின் தடுப்பூசி இன்று சுகாதார சேவைகள் பணிமனை ஊழியர்களுக்கு

wpengine