Breaking
Mon. Nov 25th, 2024

தவறிழைத்து எவராக இருந்தாலும் அவர்களது தகுதி தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என தெரிவித்துள்ள அவர் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது  செயவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக வட மாகாண மக்களால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.

சுமார் 9 லொறிகளில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பொலிஸ் மாஅதிபர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பூஜித் ஜயசுந்தர “சட்டம் அனைவருக்கும் சமமானது சட்டம் மீடப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எந்த வேளையிலும் எடுக்க கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம்.

உரிய நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு ஏற்ப எமது விசேட விசாரணையின் விளைவாக கைது செய்யும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம். நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் பல்வேறு இடங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் நான் தெளிவாக ஒரு விடயத்தை சொல்ல வேண்டும்.

நாங்கள் ஒரு தரப்பிற்கு, ஒரு இனம் மதம் அன்றில் அரசியல் தேவைப்பாடுகளுக்காக நடவடிக்கை எடுப்பதில்லை. யாரும் தவறு செய்தால் தவறு தான். அந்த தவறு இழைத்தவர் யார். அவரின் தராதரம் எமக்கு அவசியம் இல்லை. அந்த தவறுக்கு ஏற்றவாறு நாம் நீதிமன்ற நடவடிக்கையை கடந்த காலங்களிலும் எடுத்துள்ளோம்.

முடிந்தவரை விரைவாக கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வோம். ஏற்கனவே நான்கு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகளை ஒன்றிணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *