பிரதான செய்திகள்

ஞானசார தேரரைப் பார்த்து 20 இலட்ச முஸ்லிம்கள் பயப்படுவார்கள்.

பா.நிரோஸ்

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செலயணியின் தலைவர் ஞானசார
தேரரைப் பார்த்து இந்நாட்டில் வாழும் 20 இலட்ச முஸ்லிம்கள் பயப்படுவார்கள்
என அரசாங்கம் நினைக்கிறதா? என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன்
கேள்வி எழுப்பினார்.

வரவு -செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில்
கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், மத, இனவாதத்தை பேசித்
திரிபவர்களை தலையில் தூக்கி வைக்க வேண்டாம். நாட்டில் டொலர் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. அடுத்த நான்கைந்து மாதங்களில் நாட்டில் என்ன நடக்குமென
தெரியாது என்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் என
கூறுகிறார்கள். ஆனால், அல்லாஹ்வை உலகின் 2 பில்லியன் மக்கள்
ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 54 உலக நாடுகள் முஸ்லிம் நாடுகளாக இருக்கிறது
எனவும் தெரிவித்தார்.

அல்லாஹ்வை சூத்திரதாரி என கூறிய ஞானசார தேரரை ஒரே நாடு, ஒரே சட்டம்
என்கிற ஜனாதிபதியின் செயலாணியின் தலைவராக நியமித்தன் நோக்கம் என்ன?
அல்லாஹ்வை கேவலப்படுத்தியவரை தலைவராக நியமித்து எதனை

எதிர்பார்க்குறீர்கள்? இந்நாட்டின் முஸ்லிம்கள் 20 இலட்சம் பேர் பயப்படுவார்கள்
என்று நினைக்கிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.

Related posts

கனடா பிரதமரின் அதிரடி முடிவு! மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை!

wpengine

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் மீது தாக்குதல்

wpengine

“டயஸ் போராவின் கீழ் இயங்கும் ஹக்கீமுடன் இணைந்திருக்க முடியாது” ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார் ஜவாத்.

wpengine