(ஏ.எச்.எம்.பூமுதீன்)
தாராபுரம் எனும் சிறு கிராமத்தில் பிறந்து இன்று நாடுபூராகவும் அடிக்கடி மக்களால் உச்சரிக்கப்படும் நாமம் ரிஷாத் பதியுதீன் என்பதாகும்.
புலிகளால் துரத்தி விரட்டப்பட்ட தன்னையும் தனது மக்களையும் சொந்த இடத்தில் குடியேற்றி விடவேண்டும் என்ற நியாயமான ஆதங்கத்தில் உள்ள உண்மையை கண்ட இறைவன் இன்று ரிஷாத்தை அமைச்சராக்கி பெரும்பான்மைமிக்க முஸ்லிம்களுக்கும் தலைவனாக்கி உள்ளான்.
மன்னார் மாவட்டத்தில் தாராபுரம் என்பது தமிழ் சமூகத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட, சூழ்ந்துள்ள கிராமமாகும்.
இனவெறி, மதவெறி, பிரதேசவெறி துளியளவும் இல்லாத குடும்பத்தில் பிறந்ததோ என்னவோ அமைச்சர் றிஷாத்திடமும் இந்த வெறிகள் கூட பிறக்கவே இல்லை.
ஆனால், தான் சார்ந்த சமூகத்துக்கு , மார்க்கத்துக்கு வேண்டுமென்று அநீதி இழைக்கப்பட்டால் முதல் நபராக துள்ளி எழுபவர் ரிஷாதான். இதைத்தான் ஏனைய சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் செய்வர். அவ்வாறு செயட்படாதவன் சமூகத் துரோகி என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.
இந்த இடத்தில்தான் ஞானசார தேரர் உள்வாங்கப்படுகின்றார். முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தார். முஸ்லிம்கள் புனிதமாக மதிக்கும் குரானை, அல்லாஹ்வை நிந்தனை செய்தபோதுதான் அமைச்சர் ரிஷாத்- ஞானசார தேரரை எதிர்த்து போராட துணிந்தார்.
அமைச்சர் றிஷாத்துக்கோ- ஞானசார தேரோவுக்கோ தனிப்பட்ட ரீதியில் எந்த பிரச்சினையும் கிடையாது.
ஞானசார தேரோவின் பிரச்சினை எல்லாம், ஏனைய முஸ்லீம் அரசியல்வாதிகள் அமைதியாக இருக்கும்போது தனக்கு எதிராக மன்னாரை சேர்ந்த ரிஷாத் முன்வந்ததுதான்.
அமைச்சர் ரிஷாத் அமைதியாக இருந்தால் , ஞானசாரவுக்கு – அவர் நல்லவர். அத்துடன், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதியாகவும் ரிஷாத் சித்தரிக்கப்படமாட்டார்.
இது ஒருபுறம் இருக்க, தென்பகுதியில் இன்று இடம்பெற்றுள்ள வெள்ள அனர்தத்துக்கும் அமைச்சர் ரிஷாத் போன்றோரின் செயட்பாடுகள்தான் காரணம் என ஆனந்த தேரர் ( அமைச்சர் றிஷாத்துடன் விவாதம் புரிந்தவர்) உளறி இருப்பது சிரிப்பலையை எமக்கு ஏட்படுத்தினாலும் அதன் தாத்பரியம் ஆழமானது.
இயறகை அனர்த்தம் ஒன்றுக்கு அரசியல்வாதி ஒருவரை தொடர்புபடுத்தும் நிகழ்வு உலகில் இதுதான் முதல் தடவை. ஆனால், இங்கு ஆனந்த தேரர் மறைமுகமாக ரிஷாதுக்கு எதிராக இனவாத நெருப்பை சிங்கள சமூகத்தின் மத்தியில் கக்கியுள்ளார். இதனை உண்மை என நம்பும் பாமர சிங்கள சமூகத்தினரும் உள்ளனர் என்பதை நாம் மறந்துவிடவும் கூடாது.
1978 ஆம் ஆண்டு வீசிய சூறாவளிக்கு , சுனாமி தாக்கத்துக்கு, மலையக பாரிய மண்சரிவுக்கு , குப்பை மேடு சரிவுக்கெல்லாம் எந்தவொரு முஸ்லீம் அரசியல் வாதிகளையும் குறிப்பிடாத இந்த ஆனந்த தேரர், சென்றவாரம் இடம்பெட்ட வெள்ள அனர்தத்துக்கு அமைச்சர் ரிஷாத்தை நோக்கி கை நீட்டுகின்றார் என்றால் எந்தளவு தூரம் இந்த இரு தேரர்களும் றிஷாத்துடன் ஆத்திரத்தில் உள்ளனர் என்பதை முஸ்லீம் சமூகம் உணர வேண்டும்.
வெள்ள அனர்த்த பகுதிக்கு முதலில் சென்ற முஸ்லீம் அமைச்சர் என்றால் அது ரிஷாத் பதியுதீன்தான். ஆனால் அங்கு அவர் மேல் இனவாத பார்வை செலுத்தப்படவில்லை. அப்பிரதேச விகாராதிபதி உட்பட தேரர்கள், சிங்கள மக்கள் அமைச்சரை இன்முகத்துடனே வரவேட்டனர். நிறைய நிவாரண உதவிகளை வழங்கிய அவர், பாகுபாடின்றி சிங்கள மக்களுக்கான மேலதிக தேவைக்கான நிதி உதவிகளையும் விஹாராதிபதியிடம் கையளித்தார்.
இதன் பிட்பாடுதான் ஆனந்த தேரர் இப்பகுதிகளுக்கு சென்று மேட்படி துவேஷ கருத்துக்களை கக்கி உள்ளார்.
எனவே , முஸ்லிகளுக்கு எதிரான அநீதிகளை வாய்மூடி பாத்துக்கொண்டிருந்தால் ரிஷாத் நல்லவர், அவர் இனவாதி அல்லர் என்பதே இந்த இரு தேரர்களின் நிலைப்பாடாக உள்ளதை புரிந்துகொள்ள முடிகின்றது.
அதேநேரம், அமைச்சர் ரிஷாத்,சிங்கள பகுதிகளுக்கு செய்யும் உதவி , ஒத்தாசைகளை அம்மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி , ரிஷாத்- இனவாதி அல்லர் என்பதை அவசரமாக புரியவைக்க வேண்டும்.
அவசரம் தாமதமாகும் ஒவ்வொரு கணமும் , முகா இஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபுக்கு இறுதியில் நடந்த அந்த துர்ப்பாக்கிய சம்பவமே அனைவருக்கும் அவ்வப்போது ஞாபகத்தில் வந்து செல்லும்.
அன்று அஷ்ரப்பை இழந்ததால் சமூகம் அடைந்த பின்னடைவை – எதிர்கால சமூகமும் அடைந்துவிடாமல் இருக்க வேண்டுமெனில் ,அமைச்சர் ரிஷாத் இந்த நாட்டில் இன்னும் 50 வருடங்களுக்காவது உயிர் வாழ வேண்டும்.