பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கொடுக்க வேண்டும்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி தேசிய சுதந்திர தினத்தன்று பொது மன்னிப்பை வழங்குமாறு துறவிகள் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு, தேசியம், சமயத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவதாக அந்த அமைப்பின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதற்கு பதிலாக அவருக்கு கல்வி ராஜாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையில் ஞானசார தேரரை விடுதலை செய்யவில்லை என்றால், எதிர்காலத்தில் கடும் நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் ஆனந்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உள்ளூராட்சித் தேர்தலில் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி..!

Maash

கொண்டச்சி கூட்டத்தில் ஏமாந்துபோன எஹியா பாய் 11பேர் மாத்திரம்!

wpengine

நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் பொரளையில் கைது!

Editor