பிரதான செய்திகள்

ஞானசார தேரருக்கு நாளை தீர்ப்பு குற்றவாளியா?

குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கின் தீர்ப்பிற்கு நாளை திகதி குறிக்கப்பட்டுள்ள நிலையில், ஞானசார தேரருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

முன்னதான ஞானசார தேரரின் கைவிரல் ரேகை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2016 ஜனவரி 25ம் திகதி ஹோமாகம நீதிமன்றத்தில் எக்னெலிகொட தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்ற போது ஞானசார தேரர் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கல் வீச்சு காட்டு மிராண்டித்தனமானது வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கண்டனம்!

wpengine

சம்பந்தனும், சுமந்திரனும் இனவாதத்தை தூண்டுகின்றனர்.

wpengine

அடக்க மறுத்தாலும் அடக்க முடியாது; அடங்குமா Covid-19?

wpengine