பிரதான செய்திகள்

ஞானசார தேரரின் வெளிநாட்டு கோரிக்கை நிராகரிப்பு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதிக்கு கொழும்பு தலைமை நீதிமன்ற மேலதிக நீதிவான் புத்திக சிறிராகல ஒத்திவைத்தார்.

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் தண்டனைச் சட்டக்கோவையின் 140, 183, 186, 347ஆம் பிரிவுகளின் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குத் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதியன்று தனது சட்டத்தரணி திரந்த வலலியத்தவினூடாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.

அன்றைய தினம், ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணையிலும் 2 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்றுமுன் தினம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரின் ஆலோசனை தமக்குக் கிடைக்கப் பெறவில்லை என்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவினரால் நீதிவானின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே மேற்குறிப்பிட்ட தினம் அறிவிக்கப்பட்டது.

மேலும், வெளிநாடு செல்வதற்காக அனுமதி கோரிய ஞானசாரரின் கோரிக்கையும் நீதிவானால் நிராகரிக்கப்பட்டது.

Related posts

நீங்களும் விளம்பரம் செய்யலாம்-திக்ரா இஸ்லாமிய காலாண்டு சஞ்சிகையில்

wpengine

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு

wpengine

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்களை விடுவிக்க முடியாத நிலை .

Maash