பிரதான செய்திகள்

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது.

ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் யார் என்பதை முன்னாள் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற நீதி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

குறித்த செயலணியின் தரைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் முன்பு நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஒழுங்கீன நடத்தை காரணமாக தண்டனை பெற்ற ஒரு துறவியாவார்.

எவ்வாறாயினும், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் தலைவர் பிக்குவின் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நாட்களில் அவர் தொடர்பான சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஒலிப்பதிவுகள் காணப்படுவதாகவும், நேற்றைய தினமும் (8) புதிய ஒலிப்பதிவு வந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் பௌத்த மதத்தை கடைப்பிடிக்கும் பௌத்தர்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதென சுட்டிக்காட்டும் அவர், செயலணியின் தலைவருக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையில் பிரச்சினை நிலவுவதாகவும் தெரிவித்தார்.

Related posts

ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடாது முன்நகர வேண்டிய தேவை

wpengine

ஜனாதிபதி வவுனியா விஜயம்! நல்லாட்சியில் மின்சார தடை

wpengine

கடந்த காலங்களில் வடக்கில் வேகமாகப் பரவிய வெள்ளை ஈ தாக்கம், தற்போது மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.

Maash