பிரதான செய்திகள்

ஞானசார தேரரின் செயற்பாடுகள் குறித்து சிங்கள பெளத்த மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லை- மஹிந்த அமரவீர

பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் ஞானசார தேரரின் செயற்பாடுகள் குறித்து சிங்கள பெளத்த மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லை. பெளத்த மக்கள் வெறுக்கின்றனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பை அரசாங்கம் காப்பாற்றவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அவரை கைதுசெய்ய முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

பொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் அவ் அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் செயற்பாடுகள் குறித்து நாம் எதிர்ப்பையே தெரிவித்து வருகின்றோம். அதேபோல் மக்களும் இவர்களின் விடயத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஞானசார தேரர் விடயத்தில் பெளத்த மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதே உண்மையாகும். அதேபோல் பிரதான தேரர்கள் மத்தியிலும் நல்லதொரு நிலைப்பாடு இல்லை.  ஆகவே பெளத்த கொள்கையை பின்பற்றி வாழும் தேரர் அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். பெளத்ததிற்கு முன்னுரிமை கொடுத்தும், சிங்கள நாட்டை விளங்கிக்கொள்ளும் வகையிலும் இவர்கள் செயற்பட வேண்டும்.

அதேபோல் தனிப்பட்ட ரீதியில் எனக்கும் சம்பிக்க ரணவக்க அமைச்சரை பற்றி நன்றாக தெரியும். அவர் பொதுபல சேனாவை ஆதரிக்கவில்லை. ஞானசார தேரரை காப்பாற்றவும் இல்லை. வெறும் அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் மக்களையும் குழப்ப சிலர் முயற்சித்து வருகின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுபல சேனா அமைப்பை அரசாங்கம் பாதுகாக்கவில்லை. நாம் இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோகப்போவதும் இல்லை  எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொலைபேசி கொடுப்பனவை அதிகரிக்க உள்ள ரணில்,மைத்திரி அரசு

wpengine

பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனம் ,ஆனையிறவு உப்பளம் ஆகிய இடங்களுக்கு சமூகமளித்த இளங்குமரன் எம்பி.

Maash

வட மாகாண தொண்டராசிரியர்கள் சாகும்வரையிலான போராட்டம்

wpengine