பிரதான செய்திகள்

ஞானசார தேரரின் இனவாத கருத்து! MCSL முறைப்பாடு

மஹியங்கனை பிரதேசத்தில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா என்ற அமைப்பு பொதுபல சேனா அமைப்புக்கு எதிராகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளது.

குறித்த கடிதத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்ட இனவாதத்தை தூண்டும் கருத்துக்கள் அடங்கிய DVD யும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்காவின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.MCSL-Letter-to-IGP-on-the-Hatred-Speech-of-Gnasara-Thero-at-Mahiyangana-on-21-698x1024

Related posts

பயமுறுத்தும் அமைச்சரும் பயந்து விட்ட மக்களும்

wpengine

ஆனமடுவ நோக்கி நவவி விஜயம்! பிரதிப் பொலிஸ் மா அதிபரிடன் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

wpengine

இலவசக்கல்வியின் தரம் குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றது இஷாக் பா.உ

wpengine