பிரதான செய்திகள்

ஞானசாரர் மீது கை வைத்தால் நடப்பது வேறு, நாடே கொந்தளிக்கும்

ஞானசார தேரரை கொலை செய்து விட திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டதாக பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் குருநாகல் விகாரை ஒன்றில் ஊடகங்களைச் சந்தித்து கருத்து வழங்கிய போதே பொதுபல சேனா அமைப்பினர் இதனைக் கூறியுள்ளனர்.

மேலும், குறித்த அமைப்பின் சார்பில் பிக்கு ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

ஞானசார தேரர் நாட்டுக்காக சேவையாற்றிக் கொண்டு வருகின்றார். அவர் மீது பொலிஸார் அநாகரீகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் குருநாகல் விகாரையைச் சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டு ஞானசார தேரரை கைது செய்து விட முயற்சி நடைபெற்றது. இதன் போது பொலிஸார் தகாத முறையில் நடந்து கொண்டனர்.

மேலும் ஞானசார தேரரை கொலை செய்து விட அமைச்சரவையின் பிரபல அமைச்சர் ஒருவர் திட்டம் வகுத்துள்ளார். அவருடைய தம்பியிடமே இந்த கொலையை செய்யும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சதி பற்றிய விபரங்கள் அனைத்தும் எம்மிடம் உள்ளன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இது குறித்து குற்றப்பிரிவினரிடம் முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்யவுள்ளோம்.

அந்த திட்டத்திற்கான ஆரம்பமாகவே பொலிஸார் ஞானசார தேரரை கைது செய்ய வந்தனர் என்றும், அவரை சிறைக்குள் வைத்து கொன்று விட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா எனவும் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

என்றாலும் ஒன்றைத் தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம், ஞானசாரர் மீது கை வைத்தால் நடப்பது வேறு, நாடே கொந்தளிக்கும் எனவும் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம் எனவும் குறித்த தேரர் தெரிவித்துள்ளார்.

Related posts

நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாடு

wpengine

அரச நிறுவனங்களில் பணியாற்றும் சேவையாளர்களின் அலுவலக நேரத்தில் மாற்றம்

wpengine

இலங்கைக்கு கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கிய அவுஸ்திரேலியா!

Editor