ஞானசார தேரரின் இனவாத கருத்துக்கள் மற்றும் சமயத்தை இழிவுபடுத்துகின்றமைக்கு எதிராக நேற்று பொலிஸ் தலைமையகத்தில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மீண்டும் இந்நாட்டில் இனவாதத்தை தூண்ட ஒருசில சக்திகள் முயற்சி செய்கின்றன. முக்கியமாக ஞானசார தேரர் இந்நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளிலும் 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததை போன்று மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பும் நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறார்.
ஒரு சமயத் தலைவர் எவ்விதமான பொறுப்புணர்வு மின்றி இந்நாட்டு மக்களின் மனங்களை கொடூர எண்ணங்களை விதைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடுவது மிகவும் வேதனையான விடயமாகும். தற்போது மீண்டும் அவரது இனவாத கருத்துக்களை கொண்டும் சமய பிரிவினைவாதத்தை கொண்டும் இந்நாட்டு மக்களை பழிவாங்க முனைகின்றார். இதற்கெதிராகவே பொலிஸ் நிலையத்தில் முறையிட வந்தோம்.
அனைத்து மக்களையும் பாதுகாப்பதாகவும் அனைத்து மதத்துக்கும் சம அந்தஸ்து வழங்குவதாகவும் உறுதியளித்தே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இவ்வாறிருக்கையில் தற்போது மீண்டும் பிரிவினைவாதத்தை ஆரம்பித்திருக்கும் ஞானசார தேரரின் செயற்பாடுகளை கண்டிக்க வேண்டும், சமயத்தை கொண்டு ஏனையோரை தண்டிக்கும் செயற்பாட்டை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
அவ்வாறு பொலிஸ்மா அதிபர் நீதியை நிலைநாட்டாவிட்டால் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். வெல்லம்பிட்டிய கொஹிலவத்தை பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஞான சார தேரர் பொலனறுவையில் கூறியதைப்போன்று கொடிகாவத்தை சம்பவத்துக்கும் அவருக்கும் சம் பந்தம் உள்ளது என்றே தோன்றுகின்றது. மீண்டும் இனவாதத்தை தூண்டி சமய பிரசாரங்களை கொடூரமான வகையில் மக்களிடத்தில் கொண்டு செல்லும் போக் கினை உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறில் லாவிட்டால் இனிவரும் எதிர்ப்பு செயற்பாடுகள் மிக வும் மோசமானதாக இருக்கும் என்றார்.