பிரதான செய்திகள்

“ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்” – ரிஷாட் எம்.பி வலியுறுத்து!

ஊடகப்பிரிவு-

கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கைதினை தமது கட்சி வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், ஜனநாயக அடக்குமுறைகளில் இருந்து விடுபடுவதன் ஊடாக மட்டுமே நாட்டின் இன்றைய அவல நிலையிலிருந்து மக்களை காப்பாற்ற முடியும் எனவும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக விழுமியங்களை பேணுவதன் மூலமே சர்வதேச நாடுகளினதும், சர்வதேச அமைப்புக்களினதும் ஒத்துழைப்பையும் உதவிகளையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அநியாயமாகக் கைது செய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடன் விடுதலை செய்யுமாறு கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பலஸ்தீன உரிமைக்காக ஆதரவளிப்போம்

wpengine

ரணிலின் அதிரடி தீர்மானம்! பதவி விலகல்

wpengine

வலுக்கும் வெங்காயச் சண்டை

wpengine