பிரதான செய்திகள்

ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கு! நல்லாட்சியில் மீண்டும் விசாரணை

நுவரெலியா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு எதிரான படுகொலை வழக்கை, ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வவுனியா நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தன்னுடைய தனிப்பட்ட தேவைக்காக சென்றுகொண்டிருந்த போது, வவுனியா-செட்டிக்குளம் வைத்தியசாலையின் மதிலில், தன்னுடைய வாகனத்தை 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதியன்று மோதியமையால், பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவைச்சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பலியானார். இதுதொடர்பில், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பும் வழக்கப்பட்டது.

இந்த கொலை வழக்குக்கு, நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் தாங்கள் திருப்திகொள்ள முடியாது என்று, பலியான பொலிஸ் சார்ஜன்டின் உறவினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். இதனையடுத்தே, அந்த விவகாரம் தொடர்பிலான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென செட்டிக்குளம் நீதவான் நீதிமன்றத்தில், கடந்த 22ஆம் திகதியன்று செட்டிக்குளம் பொலிஸார், நகர்வு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது, ஸ்ரீ ரங்காவே வாகனத்தைச் செலுத்திச்சென்றதனால் சாரதியின் இடது பக்க ஆசனத்தில் அமர்ந்து பயணித்த பொலிஸ் சார்ஜனான உதய ஜயமினி புஸ்பகுமார என்பவர் பலியானார். சம்பவத்தில், முன்னாள் எம்.பியும் காயமடைந்து அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுள்ளார். இந்நிலையில், வழக்கில் சாட்சியாளர்களான 16 பேரில், பிரதான சாட்சியாளர்களாக அறுவர் குறிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

நாடாளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க தீர்மானம்

wpengine

வவுனியாவில் அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

Editor

விக்ரமசிங்க ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் – நாமல் ராஜபக்ஷ

wpengine