மக்கள் விடுதலை முன்னணி கடந்த காலத்திலிருந்தே குறுகிய கொள்கைகளைக் கொண்ட ஒரு அரசியல் கட்சியாக இருந்து வருகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட நூலை நேற்று வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
1988/89 காலகட்டத்தில் தனது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விமல் வீரவன்எழுதிய “சந்தே கிந்தர” என்ற நூல் வெளியீடு நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு மேல் மாகாண அழகியல் கலை மையத்தில் நடைபெற்றது.
மேலும் குறித்த நூலில் மக்கள் விடுதலை முன்னணி பற்றிய வெளியிடப்பட்படாத உள்ளக தகவல்கள் அடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் விடுதலை முன்னணிக்குள் இரண்டு பிரிவுகள் காணப்படுவதாகவும், மற்றைய பிரிவின் தலைவர் அரசியல் விடயங்களுக்கு தலைமை தாங்குவதில்லை என்றும் கூறியுள்ளார்.
அத்தோடு ஜே.வி.பியின் வெளிதோற்றத்திற்கு முரணான உள்ளக விடயங்களை பகிரங்கப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. அந்த காலம் தொடக்கம் அவர்கள் இதனை செய்தார்கள் என்றும் கூறியுள்ளார்.