Breaking
Sun. Nov 24th, 2024

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ஜேர்மன் தீவிர வலதுசாரி தீவிரவாதிகள் பெரிய அளவிலான மசூதி தாக்குதல்களைத் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை ஜெர்மனி முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 12 ஆண்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


சந்தேகத்திற்குரிய பயங்கரவாத சதிகாரர்கள் பிரார்த்தனை நடைபெறும் போது, முஸ்லிம்கள் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்துள்ளனர்.


கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த தாக்குதல்களை போலவே தானியங்கி ஆயுதங்களைப் பயன்படுத்த குழு திட்டமிட்டிருந்துள்ளது.

இந்த தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல் தனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுப்பதாக உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜோர்ன் க்ரூனேவெல்டர் தெரிவித்துள்ளார்.


அந்த குழுவில் ஊடுருவிய ஒருவரின் மூலம் சதித்திட்டம் குறித்து புலனாய்வாளர்கள் அறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களின் சந்திப்புகள் மற்றும் நடவடிக்கைகள் கண்காணிப்பில் இருந்துள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களின் தலைவர் கடந்த வாரம் ஒரு கூட்டத்தில் தனது திட்டங்களை விவரித்துள்ளார்.


ஜேர்மன் செய்தித்தாளான Bild படி, குழுவின் தலைவர் ஆக்ஸ்பர்க்கைச் சேர்ந்த 53 வயதான வெர்னர் எஸ் என புலனாய்வாளர்களால் அறியப்பட்டுள்ளது.


வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட 12 பேரில், நான்கு பேர் இந்த குழுவை நிறுவியதாக நம்பப்படுகிறது. மேலும் எட்டு பேர் பணம் மற்றும் ஆயுதங்களை கொடுக்க முன்வந்துள்ளனர்.


சந்தேக நபர்கள் அனைவருமே ஜேர்மன் குடிமக்கள், தீவிர வலதுசாரிகளுடனான தொடர்புகள் காரணமாக முன்னர் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு காவல்துறை அதிகாரியும் அடங்குவதாக வடக்கு-ரைன் வெஸ்ட்பாலியா மாநில உள்துறை மந்திரி ஹெர்பர்ட் ரியூல் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *