உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜேர்மனியில் கடும் பனி! விமானங்கள் ரத்து

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக ஜேர்மன் பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குளிர்காலம் தொடங்கியுள்ளதால் நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து முடங்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் வர்த்தக நகர விமான நிலையமான Frankfurt விமான நிலைய ஓடுபாதை முழுவதுமாக பனிக்கட்டிகளில் மூழ்கியுள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று(10-12-2017) மாலை 5 மணியளவில் சுமார் 330 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் Fraport தெரிவித்திருந்தார்.

மேலும் பாதி வழிகளில் வந்து கொண்டிருந்த விமானங்களும் தாமதமாகவே தரையிறக்கப்பட்டன.
குறிப்பாக Lufthansa விமான சேவை நிறுவனம் மட்டும் நாள் ஒன்றுக்கு 1,260 விமானங்களை இயக்குவது வழக்கம், நாட்டின் வெப்ப நிலை பூஜ்ஜியத்துக்கும் குறைவாக சென்றதால் அதன் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விமான நிலைய இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், விமான இருக்கைகளை முன்பதிவு செய்துள்ளவர்கள் வெப்ப நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஆன்லைனில் ஒரு முறை சோதனை செய்திவிட்டு விமான நிலையத்துக்கு பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி

wpengine

பனை உற்பத்தி பொருட்களை அதிகரிக்கும் நானாட்டன் சுபாஜினி

wpengine

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை விஜயம்!

Editor