உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜெருசலம் விவகாரம்! அமெரிக்காவின் வீட்டோவால் ரத்து

ஜெருசலேம் விவகாரம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் ரத்து செய்தது.

1948ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் எகிப்து, ஜோர்டான், சிரியா உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இடையே நடந்த போரில் மேற்கு ஜெருசலேம் இஸ்ரேல் வசம் வந்தது.

அதன்பிறகு 1967ஆம் ஆண்டு  நடந்த போரில் கிழக்கு ஜெருசலேமையும் இஸ்ரேல் கைப்பற்றியது. பின்னர் ஒருங்கிணைந்த ஜெருசலேத்தை நாட்டின் தலைநகராக அறிவித்தது. இதனை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் தூதரகங்கள் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரிலேயே செயல்படுகின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. இவ் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில் அமெரிக்காவின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக எகிப்து சார்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் “அமெரிக்காவின் முடிவு சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது, இந்த முடிவை அமெரிக்கா வாபஸ் பெற வேண்டும்”  ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 14 உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தனர். ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தீர்மானத்தை ரத்து செய்தது.

இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியபோது,

“ஜெருசலேம் விவகாரத்தில் நன்மைக்குப் பதிலாக ஐ.நா. தீங்கு விளைவிக்கிறது. இஸ்ரேலில் எங்கு தூதரகம் அமைப்பது என்பது அமெரிக்காவின் தனிப்பட்ட விருப்பம். எங்கள் நாட்டின் இறையாண்மையை காக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அமெரிக்காவின் முடிவு குறித்து பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

Related posts

அமீர் அலி அரச காணி விவகாரம்! பதில் சொல்லுவாரா?

wpengine

ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஊழல்

wpengine

தாஜூதீனின் உடற்பாகங்களை தேடி கல்லூரியில் திடீர் சோதனை

wpengine