Breaking
Fri. Nov 22nd, 2024

பஸ் கட்டணங்களை எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 20 வீதத்தினால் குறைக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
 

தேசிய கொள்கைக்கு அமைய ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வசமாகின்றது.

இதன்படி, 12 பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கைகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருகின்றது.


எரிபொருள் விலை, வாகன உதிரி பாகங்களின் விலை குறைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் பரவல் காலப் பகுதியில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அடிப்படையில், பயணிகளை அழைத்து செல்லும் நடைமுறை அமுல்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அதிகரிக்கப்பட்ட 20 வீத பஸ் கட்டண அதிகரிப்பு இதுவரை குறைக்கப்படவில்லை என போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்பின்னரான காலத்தில் பஸ் கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.


இவற்றை அடிப்படையாகக் கொண்டு, தற்போது 30 ரூபாவாக காணப்படும் ஆகக்குறைந்த பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் குறைக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

A B

By A B

Related Post