(அல் அதர் மீடியா)
உலக அளவில் அறியப்பட்ட இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகரான டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களை ஒரு தீவிரவாதியாக உலகிற்கு சித்தரிக்க முயலும் மோடி அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.
சென்ற வாரம் பங்களாதேஷ் தலை நகரான டாக்காவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு டாக்டர் ஜாகீர் நாயக் அவர்களது போதனைகள் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரின் உரைகளை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசிடம் பங்களாதேஷ் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்தியாவின் தேசிய புலனாய்வு மற்றும் உளவுத்துறை உள்ளிட்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவரின் தொலைக்காட்சி அலைவரிசைகள் முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அவரது உரைகளை யூ டியூப்பில் இருந்தும் நீக்குவதற்கு தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவரின் எழுத்துக்களையும் ஆய்வு செய்ய பாஜக கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.