உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பிடிவாரன்ட்

பண மோசடி வழக்கில் மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து மும்பை சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.

இதனையடுத்து ஜாகிர் நாயக்கிடம் பண மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts

அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி வெற்றிடம்

wpengine

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்.

wpengine

‘வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் ” : சம்பந்தனின் கருத்துக்கு சுரேஷ் பதில்

wpengine