உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு


ஜப்பானில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோ அருகில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. 7.0 ரிக்டரில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இஷினோமாகியில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கம் காரணமாக டோக்கியோவில் கட்டடங்கள் கடுமையாக அதிர்ந்துள்ளன. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

காதலி பார்க்கும் போதே! காதலன் தற்கொலை (விடியோ)

wpengine

இரு துருவங்களாக்கப்படும் ஹக்கீமும் ஹசன் அலியும்

wpengine

இலங்கை முஸ்லிம்களின் பாதுகாப்பு கவசம் கிழக்கு மாகாணம்- அமைச்சர் றிஷாட் பதியுதீன்

wpengine