உலகச் செய்திகள்

ஜப்பானில் 10 பேருடன் சென்ற இராணுவ ஹெலிகொப்டர் மாயம்!

ஜப்பானின் தெற்கு பகுதியில் 10 நபர்களுடன் புறப்பட்டுச் சென்ற இராணுவ ஹெலிகொப்டர் இன்று(06) மாயமாகியுள்ளது. ருர்-60 பிளாக் ஹாக் என்ற ஹெலிகொப்டர் மியாகோ தீவு அருகே சென்றபோது மறைந்துள்ளது.

குறித்த ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. ஹெலிகொப்டருடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடலோர காவல் படையின் மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நான்கு கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related posts

ஜாகிர் நாயக்கை கைது செய்ய சிவசேனா வலியுறுத்தல்

wpengine

சவுதி விஜயத்தின் நோக்கம் நிறைவேறியுள்ளது டிரம்ப்

wpengine

அம்பானி மகளா ? பிரில்லா மகளா ? காஸ்மெடிக்ஸ் வியாபாரம், விளம்பரம் முந்தபோறது யார் ?

Maash