செய்திகள்பிரதான செய்திகள்

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு …

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

லங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கையர்களுக்கு இந்த வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, 18 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதனூடாக 5 வருடங்களுக்கு தாதியராக பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளதுடன், 4 இலட்சம் ரூபாவினை வருமானமாகப் பெற முடியும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளை தூண்டும் புதுமையான அரசியல்

wpengine

பல ஆயிரக்கணக்கான மக்கள் சூழ, புதிய ஆயர் வரவேற்பு!

wpengine

2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 62,000 பேர் கைது..!

Maash