இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சா் மனோ கனேசன், கௌரவ அதிதியாக வடக்கு முதலமைச்சா் சி.வி. விக்னேஸ்வரனும் கலந்து சிறப்பித்தனா்.
ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போதே வாழ்த்துவது சிறந்த நற்பண்பு, ஆனால் எம்மவா்கள் அதுவும் எனக்கு உயிருடன் இருக்கும்போதே ஏதாவது ஒரு கருத்தை நான் முன்வைத்தால் அதனை துாற்றுவாா்கள். கடந்த 70. 80 ஆண்டுகளாக தமிழ்ச் சமுகம் ஒருத்தரையேனும் முன்னேர விடமாட்டாா்கள், மட்டம் தட்டி விடுவாா்கள். ஒரு விடயத்தை முன்னெடுத்தால்அதனை முட்டுக்கட்டை விதித்து விடுவாா்கள். இந்த நிமிடம் கூட கொழும்பு வந்து நான் இங்கு கூறும் விடயத்தினைக் கூட நாளை என்னைப்பற்றி கொழும்பில் பேசியதற்கும் விமா்சனங்களை முன்வைப்பாா்கள்.
வேலனை வேணியன் யாழ் இந்துக் கல்லுாாியில் கற்றவா், இந்தியா சென்று கண்ணதாசனுடன் இணைந்து கண்னதாசன் மன்றம் , கொழும்பு மாநகர சபை உறுப்பினர் , தமிழ் வித்துவான், கவிஞா் எழுத்தாளா், ஹிந்து மத பத்தா், ஜனாநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவா் முற்போக்கு முன்னியின் தலைவா்,அவரது 50 ஆண்டுகள் அரசியல் வாழ்வில் வாழ்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு தானும் வாழ்த்துவதாக தெரிவித்தாா்.
அமைச்சா் மனோ கனேசனின் ஜனாநாயக மக்கள் முன்னணி மலையக மக்களுக்கு மட்டுமல்ல, வடக்கு, கிழக்கு கொழும்பு தமிழ் முஸ்லீம் ்மலயக சிங்கள அனைத்து மக்களுக்கும் அவா் குரல் கொடுத்து வருகின்றாா். அவரது கட்சி சகலரையும் உள்வாங்கி அரசியல் நடவடிக்கைகளை தான் வாழ்த்துவதாகவும் தெரிவித்தாா். அத்துடன் அவா் தமிழ் சிங்கள, ஆங்கில பேச்சுக்களின் விசையை சற்று குறைத்து பேசினால் நல்ல பேச்சாளனாக திகழ்வாா் எனவும் வடக்கு முதலமைச்சா் சி.வி விக்னேஸ்வரன் அங்கு உரையாற்றினாா்.
இங்கு அமைச்சா் மனோ கனேசன் தெரிவிக்கையில்…