பிரதான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் நானே தீர்மானிப்பேன் மஹிந்த

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் தன்னாலேயே தீர்மானிக்கப்படுவார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று இடம்பெறும் கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெல்லன்வில ரஜமகா விகாரையில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களின் பெயர்கள் பேசப்படுகின்றன.

இந்நிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசுகையில்,

“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் தன்னாலேயே தீர்மானிக்கப்படுவார். அதன்பின்னர், கட்சியினால் குறித்த வேட்பாளர் அங்கீகரிக்கப்படுவார்.

மேலும், இன்று காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மே தின பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்வார்கள் என தான் நம்புவதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

முசலி பிரதேச விவசாயிகளுக்கு உளுந்து,பயறு வழங்கி வைத்த காதர் மஸ்தான்

wpengine

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் வழக்கில் அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) ஈடுபாடு

wpengine

கண்டி,அம்பாறை மீதான தாக்குதல் ஐ.நா.வில் ஆவண திறைப்படம்

wpengine