பிரதான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை மஹ்ரூப்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கும் முன்னர், கட்சியுடன் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் கருத்தை அறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர் சம்பந்தமான சிறிய கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் அவற்றின் யோசனைகள் தொடர்பாக எதிர்வரும் 5ஆம் திகதி கலந்துரையாடப்பட உள்ளதாக இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய ஆகியவற்றின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்துக்கொள்ள உள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் செயற்குழு தெரிவு செய்யும் ஜனாதிபதி வேட்பாளருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவு வழங்கும். எனினும், அனைத்து கட்சிகளின் இணக்கம் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில், வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும்.

ஐக்கிய தேசிய முன்னணி நிறுத்த போகும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பேசப்பட்டு வந்தாலும் முன்னணியில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அது சம்பந்தமாக இதுவரை எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் அப்துல்லா மஹரூப் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள், இன்று என்னைச் சந்தித்தார்:

wpengine

பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன மோசடி-பாதிக்கப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு

wpengine

‘ஒன்றிணைந்த எதிரணியென அழைக்க வேண்டாம்’

wpengine