பிரதான செய்திகள்

ஜனாதிபதி வவுனியா விஜயம்! நல்லாட்சியில் மின்சார தடை

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக இன்றைய தினம்(21) குறித்த மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, யாழ். மாவட்டத்தின் பொன்னாலை, காரைநகர், காரைநகர் கடற்படை ஜெற்றி, காரைநகர் இராணுவ, கடற்படை முகாம், வடலியடைப்பு, தொல்புரம், சத்தியகாடு, கள்ள வேம்படி, சுழிபுரம், பத்தானை, கேணியடி ஆகிய பகுதிகளிலும்,
மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஸ்வரம், மாந்தை மேற்கு, சிறுநாவற் குளம், நாகதாழ்வு ஆகிய பகுதிகளிலும்,
வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம் பிரதேசத்திலும் காலை 08 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின்சார தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தாஜுதீன் கொலை: சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை நிராகரிப்பு

wpengine

மன்னார்-அம்பாறை துறைமுகம் தேவை! ஏற்றுமதியினை அதிகரிக்க முடியும் – சாணக்கியன்

wpengine

தாஜூடீன் கொலை! அனுர சேனாநாயக்க 4ம் திகதி வரை விளக்கமறியல்

wpengine